• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பிற்கமைய, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிறுவனங்களும், முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய ஊடக சந்திப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,

கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட 12 நிறுவனங்களுக்குப் பதிலாக,
தற்போது 6 நிறுவனங்கள் மாத்திரமே நாம் நிறுவியுள்ளோம்.

இதன் மூலம் 12,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பினை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனங்களிடமே பொறுப்புக்களையும் பகிர்ந்தளித்துள்ளோம்.
இரண்டு நிறுவனங்கள் இந்த மறுசீரமைப்புக்களின் இடைநிலை பணிகள் சார்ந்தவையாக உள்ளன.

எஞ்சிய நான்கு நிறுவனங்கள் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போதும் மின் உற்பத்தி, விநியோகம், மின் கடத்தல் மற்றும் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட செயற்பாடுகள்,நான்கு பிரிவுகளின் கீழ் இலங்கை மின்சாரசபையால் முன்னெடுக்கப்பட்டது.

அவையே தற்போது 4 நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மின்சாரசபைக்கான 500 பில்லியன் ரூபா செலவில்,
400 பில்லியன் ரூபா மாத்திரம் மின் உற்பத்திகான செலவிடப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் காணப்பட்ட பிரிவுகளை நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம்
அவற்றின் செயற்றிறனை அதிகரிப்பதற்கும், தனியாருக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கி
குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும்
இந்த மறுசீரமைப்பின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்களுக்கான, நிர்வாக அதிகாரிகளும்,
பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி மறுசீரமைப்பிற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எவ்வாறிருப்பினும் நாம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு,
நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளோம்.

ஆனால் மீண்டும் 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருத்தப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒக்டோபரில் இது தொடர்பான தெளிவு படுத்தல்கள் ஊழியர்களுக்கு அறிவித்தலூடாக வழங்கப்பட்டது.

நிறுவனங்களில் இணைய விரும்பாதவர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு பெற வாய்ப்பளிக்கப்பட்டது.

அதற்கமைய ஓய்வு பெற விண்ணப்பித்த 2153 ஊழியர்களில், 2113 ஊழியர்களுக்கு நஷ்டஈட்டுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது.

ஏனைய ஊழியர்களுக்கான கொடுப்பனவு, மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்டவற்றில்
எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

Related

Tags: cylone electricity boardsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

Next Post

எண்ணெய் விலை 13% சரிந்தது!

Related Posts

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
இலங்கை

2026-03-11
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

2026-03-11
பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிவில் பொருளாதார கண்காணிப்புக் குழு கூட்டம்
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிவில் பொருளாதார கண்காணிப்புக் குழு கூட்டம்

2026-03-11
Next Post
எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

0
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

0
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

0
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

0
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

0
எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

2026-03-11
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

2026-03-11
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

2026-03-11
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

2026-03-11
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

2026-03-11

Recent News

எண்ணெய் விலை 13% சரிந்தது!

எண்ணெய் விலை 13% சரிந்தது!

2026-03-11
இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

2026-03-11
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

2026-03-11
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.