ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கணித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விநியோகத்தில் நீடித்த இடையூறுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்தது.
இதனால், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த திங்களன்று மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்ந்த மசகு எண்ணெய் விலை செவ்வாயன்று (10) 13 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
செவ்வாய் GMT 16.58 நிலவரப்படி பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $12.46 அல்லது 6.6% சரிந்து 92.45 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் $6.12 அல்லது 12.6 சதவீதம் குறைந்து $86.50 அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.
அதே நேரத்தில் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் விலை $12.24 அல்லது 12.9 சதவீதம் சரிந்து $82.53 ஆக இருந்தது.
சவுதி அரேபியா மற்றும் பிற உற்பத்தியாளர்களின் விநியோகக் குறைப்புக்கள் உலகளாவிய விநியோகங்களில் பெரும் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தைத் தூண்டியதால், இரண்டு மசகு எண்ணெய் அளவுகோல்களும் திங்களன்று ஒரு பீப்பாய்க்கு $119 க்கும் அதிகமாக உயர்ந்தன.
இது 2022 ஜூன் மாதத்துக்குப் பின்னர் அதிகபட்ச விலை உயர்வாகும்.














