பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ (UK City of Culture) விருதுக்கான போட்டியில் களமிறங்கும் 9 நகரங்களின் பட்டியலை அந்நாட்டு கலாசார அமைச்சு வெளியிட்டுள்ளது.
பிளாக்பூல் (Blackpool), ஷெஃபீல்ட், ஸ்விண்டன் மற்றும் ரெக்ஸ்ஹாம் (Sheffield, Swindon, Wrexham) உள்ளிட்ட 9 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
தற்போதுள்ள பிராட்போர்டு (Bradford) நகரத்தைத் தொடர்ந்து, 2029-ஆம் ஆண்டில் கலாசார நகராகத் தெரிவு செய்யப்படும் நகரத்திற்கு, கலை மற்றும் கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க 10 மில்லியன் பவுண்டுகள் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் தலா 60,000 பவுண்டுகள் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த விருது உள்ளூர் அடையாளங்களை உலகிற்கு வெளிப்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என கலாசாரச் செயலாளர் லிசா நந்தி (Lisa Nandy) தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவென்ட்ரி (Coventry) நகரம் இந்த விருதைப் பெற்றபோது, அந்த நகரின் பொருளாதாரம் 183 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் வளர்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.













