கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று இடம்பெறுகிறது.
கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறி ஒன்றியம் மற்றும் சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் பெற்றோர் சங்கம் ஆகியன இணைந்து இந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் (Softball Cricket) சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.
இப்போட்டித் தொடர் இன்றும் (21) நாளையும் (22) கொழும்பு நவகம்புர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெருக்கிறது.
இன்று காலை 8:30 மணி முதல் ஆரம்பமான இப்போட்டிகளில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
“அறநெறிக் கல்வியின் ஊடாக நல்லொழுக்கம் மிக்க பிரஜைகளை உருவாக்கி, நாடும் வீடும் போற்றும் வகையில் மாணவர்கள் வாழ்வதற்கு வழிவகுப்பதே” இந்த விளையாட்டு விழாவின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்களிடையே ஒற்றுமையையும், விளையாட்டுத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தொடர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவிற்குச் சங்கத் தமிழ் இந்து மன்றத்தினர் விளையாட்டு ஆர்வலர்களையும், பெற்றோர்களையும், பொதுமக்களையும் அன்போடு அழைக்கின்றனர்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கப் பெருந்திரளான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.













