• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

பரபரப்பான கட்டத்தில் தொடர்!

Hanushya P by Hanushya P
2026/03/23
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ஆகியன அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் வெற்றிகொண்டதுஆரம்பம் முதல் கடைசிவரை இரண்டு அணியினரும் மிகத் திறமையாக விளையாடி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தினர்.

போட்டியின் 4ஆவது நிமிடத்தில் ஜொன் லவானி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து நியூ ஸ்டார் கழகம் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது.

நியூ ஸ்டார் கழக வீரர்கள் இருவர் கோல் போட எடுத்த முயற்சிகள் கோல்காப்பின் குறுக்குக் கம்பத்தில் பட்டு திசை திரும்பின.

இடைவேளையின்போது சென். மேரிஸ் கழகம் 1 – 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் நியூ ஸ்டார் வீரர் மொஹமத் தில்ஹாம் 49ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தினார்.இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

56ஆவது நிமிடத்தில் ஜே. ஜெரின்சன் தலையால் முட்டி அருமையான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.அதன் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆனால், இறுதியில் சென். மேரிஸ் கழகம் 2 – 1 என வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஜாவா லேன் கழகத்துக்கும் தர்காநகர் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் ஜாவா லேன் கழகம் 16 – 15 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் சம அளவில் மோதிக்கப்பட்ட இந்தப் போட்டி 2 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.இப் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இஸ்மய்லா அபுமியர் கோல் போட்டு சுப்பர் சன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 77ஆவது நிமிடம்வரை சுப்பர் சன் முன்னிலையில் இருந்தது.ஜாவா லேன் சார்பாக 78ஆவது நிமிடத்தில் கோல் நிலையை என்வாபிசி பேர்னார்ட சமப்படுத்தினார்.

ஆனால், அடுத்த நிமிடமே அபுமியர் தனது இரண்டாவது கோலைப் போட்டு சுப்பர் சன்னை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

எனினும் போட்டியில் 90ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெனல்டியை ஒலுவாசேயுன் ஒலாவாலே கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.மத்தயஸ்தரினால் வழங்கப்பட்ட பெனல்டியை சுப்பர் சன் கழக வீரர்கள் கேள்விக்குட்படுத்தியதுடன் அதிகாரிகளும் அது தவறான தீர்ப்பு என வாதிட்டனர். ஆனால், மத்தியஸ்தர் எடுத்த தீர்ப்பு சரியானது என்பது சலன அசைவுகளின் மூலம் தெளிவாக அறியக்கூடியதாக இருந்தது.

போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அறிமுகப்படுத்தினார்.19 பெனல்டிகள் வரை நீடித்த இந்த பெனல்டி முறையில் 16 – 15 என ஜாவா லேன் வெற்றிபெற்றது.

Related

Tags: Football Association of Sri Lanka.football tournamentNavanthurai and Java Lane ClubSt. Mary's Club
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

Next Post

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

Related Posts

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!
இலங்கை

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

2026-03-22
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
கிரிக்கெட்

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

2026-03-22
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!
இலங்கை

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

2026-03-21
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!
கிரிக்கெட்

ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

2026-03-21
Next Post
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் - ஜனாதிபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

0
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

0
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

0
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

2026-03-23
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

2026-03-23
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

2026-03-23

Recent News

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

2026-03-23
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

2026-03-23
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.