அண்மைய எண்ணெய் விலை உயர்வு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்கான ஏற்பாடுகளைக் கடுமையாகக் குறைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் (PCB) நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான போட்டியை ஆறு மைதானங்களிலிருந்து இரண்டாகக் குறைத்து, அதன் போட்டிகளைச் சுருக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைக்கும் நோக்கில், மைதானங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமின்றி, தொடரின் ஆரம்ப விழாவை இரத்து செய்யவும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
உலகளாவிய எண்ணெய் நெருக்கடியுடன், பல வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேறியதாலும் இந்த லீக் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது பல வீரர்கள், காயம் காரணமாக விலகிய வீரர்களுக்குப் பதிலாக இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த தீரம்னத்தை உள்ளூர் மற்றும் வெளியூர் கிரிக்கெட் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கடுமையாகக் விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













