பங்களாதேஷில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த சோகமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 11 பெண்கள், எட்டு சிறுவர்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர்.
உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (26) உறுதிப்படுத்தினர்.
புதன்கிழமை மாலை சுமார் 5:15 மணியளவில், டாக்கா நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று, தௌலத்தியா படித்துறையில் உள்ள 3 ஆம் எண் மிதவைப் பாலத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் குறைந்தது 50 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், விபத்து நடந்த உடனேயே பல பயணிகள் தப்பித்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, தீயணைப்புத் துறை மற்றும் பிற தொடர்புடைய முகமைகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் மீட்புப் பணிகளை ஆரம்பித்திருந்தர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
















