யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான காசிப்பிள்ளை மாதுருபாகன் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












