• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

Hanushya P by Hanushya P
2026/04/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
66 2
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும்,  முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க வேண்டும் எனவும்,  அது அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் பொறுப்பாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

​நவீன வசதிகளுடன் கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘Silver Age Center’ முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ‘Zoom’ ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

blank

இந்நிகழ்வு மார்ச் 31ஆம் திகதி செத்சிரிபாய புதிய கட்டடத்தில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்றது.​இதன்போது முதியோர்களுக்கான நிறுவன ரீதியான பராமரிப்பை வழங்கும் நிலையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கட்டளைகள் மற்றும் வழிகாட்டல் வரைபினை, முதியோர்களுக்கான தேசிய சபையின் பிரதிநிதிகள் பிரதமரிடம் கையளித்தனர்.

​அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும்,  அந்தத் திட்டத்தை நாம் மீண்டும் ஆரம்பித்து இன்று மக்கள் பாவனைக்காகக் கையளிக்கின்றோம்.
​எமது கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, அனைவருக்கும் பாதுகாப்பான,  உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அந்த உரிமை,  சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்.

​சனத்தொகையின் அடிப்படையில்,  எமது நாட்டில் பெருமளவிலானோர் மிக வேகமாக முதியவர்களாக மாறி வருகின்றனர். ஆயினும் 60 வயது என்பது சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கக்கூடிய ஒரு சுறுசுறுப்பான வயதெல்லை ஆகும். அவர்கள் முதியவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கும் பல்வேறு தேவைகள் இருக்கவே செய்கின்றன. திறமையும் அனுபவமும் மிக்க அவர்களாலும் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

​முதியோர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தகைய நிறுவனங்களை முறையாகப் பராமரிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். குடும்பத்தினரோடு சுதந்திரமாகவும்,  பல்வேறு நிறுவனங்களுக்குள்ளும் வாழும் அனைத்து முதியோர்களுக்கும் பாதுகாப்பையும் தேவையான சேவையையும் வழங்கிஇ அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிக அவசியமானதாகும்.

​முதியோர்களுக்கான ஆரோக்கியம், போக்குவரத்து, முதியோர் கல்வி,  சுதந்திரம், மகிழ்ச்சி போன்றே அவர்களின் உரிமைகள் மற்றும் ஆன்மீக நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

​வழக்கமான ‘முதியோர் இல்லம்’ என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, முதியோர்களின் தேவைகளுக்கேற்ப சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனங்களாக, அவர்கள் தமது அந்திமக் காலத்தைக் கௌரவமாகக் கழிக்கக் கூடிய வகையில் இந்நிலையங்களைப் பராமரிப்பது அவசியமாகும், என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

​வர்த்தக,  வாணிப,  உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் ‘Silver Age Center” முதியோர் பராமரிப்பு.  பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி,  சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே,  அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் பிரதமருடன் இணையவழி ஊடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: government and societyhappinessindependencePrime Minister Dr. Harini Amarasooriyaresponsibility
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

Next Post

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

Related Posts

இலங்கை

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?மயூரப்பிரியன் – 

2026-05-28
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
இந்தியா

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

2026-05-28
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !
இந்தியா

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

2026-05-28
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28
அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!
ஆபிாிக்கா

அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

2026-05-28
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!
இலங்கை

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
Next Post
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் - 13 நாய்கள் பலி.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?மயூரப்பிரியன் – 

0
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

0
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

0
மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?மயூரப்பிரியன் – 

2026-05-28
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

2026-05-28
மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

2026-05-28
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

2026-05-28
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28

Recent News

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?மயூரப்பிரியன் – 

2026-05-28
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

2026-05-28
மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

2026-05-28
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.