ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் சார்லஸ் தனது வொஷிங்டன் பயணத்தின்போது, ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் நேற்று (02) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதன் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக சார்லஸும் அவரது மனைவி ராணி கமிலாவும் அமெரிக்காவுக்குச் செல்வார்கள் என்றும், அதைத் தொடர்ந்து இந்தத் தம்பதியினர் பெர்முடாவுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஈரான் போரினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான உறவுகளைச் சரிசெய்ய இங்கிலாந்து அரசாங்கம் முயன்று வரும் வேளையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இடம்பெறவுள்ளது.
2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
2007 ஆம் ஆண்டில் சார்லஸின் தாயாரான எலிசபெத் ராண, தனது ஆட்சிக்காலத்தில் நான்காவது முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
மன்னர் மற்றும் ராணியின் பயணம் ஏப்ரல் 27 அன்று தொடங்கும் என்றும், மறுநாள் வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்துடன் இது தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















