• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

Hanushya P by Hanushya P
2026/04/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மார்ச் 31 ஆம் திகதி வரை 42வீத டீசலை சேமித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.

ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாக இயங்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சைகள் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்ததுடன், போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம், நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள் அத்தியாவசிய ஊழியர்களை வரவழைத்தும், இணையவழி ஊடாகவும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நீர் விரயமாவதைத் தவிர்த்தல் மற்றும் மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசரத் திட்டமொன்றைஇ தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சின் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்படி 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும்,  சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாளாந்த வலுசக்தி நுகர்வு, கையிருப்பு அளவு, அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றை Dashboard ஊடாகக் காட்சிப்படுத்தி, உரிய பணிகளைக் கண்காணிப்பதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பொது நிர்வாக,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எம். எச். அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கல்வி,  உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி. எம். உதயங்க ஹேமபாலஇ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி. ஆர். டபிள்யூ. எஸ். தனபால,  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related

Tags: Cabinet CommitteePrime Minister Dr. Harini AmarasooriyaPublic Service Reformthird meeting
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

Next Post

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Related Posts

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!
உலகம்

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

2026-04-02
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!
இங்கிலாந்து

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

2026-04-02
கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இலங்கை

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2026-04-02
ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
இஸ்ரேல்

ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2026-04-02
பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!
இலங்கை

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

2026-04-02
Next Post
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

0
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

0
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

0
கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

2026-04-02
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

2026-04-02
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

2026-04-02
கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2026-04-02

Recent News

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

2026-04-02
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

2026-04-02
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

2026-04-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.