பெருவின் தலைநகரில் உள்ள அலெஜான்ட்ரோ வில்லானுவா மைதானத்தில் ஒரு கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேரணியின் போது வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாக பெருவின் சுகாதார அமைச்சர் ஜுவான் கார்லோஸ் வெலாஸ்கோ (Juan Carlos Velasco) தெரிவித்துள்ளது.
எனினும், என்ன சம்பவம் நடந்தது என்ற தெளிவான காரணத்தை குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் மைதானச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுதான் என்று கூறப்பட்டது.
ஆனால் மைதானத்தின் எந்தப் பகுதியும் இடிந்து விழவில்லை என அலியான்சா லிமா கால்பந்து அணி மறுத்துள்ளது.













