சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என மின்னஞ்சல் மூலமாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சண்டிகர் நகரில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
அந்த மின்னஞ்சலில், கூறப்படும் குண்டுவெடிப்புகளுக்கான குறிப்பிட்ட நேரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று பிற்பகல் 1:11 மணிக்கு பாடசாலைகளும், பிற்பகல் 2:11 மணிக்கு மேயர் அலுவலகமும், பிற்பகல் 3:11 மணிக்கு தலைமைச் செயலகமும் குறிவைக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், அதே இரவில் இரவு 9:11 மணிக்கு சண்டிகர் பல்கலைக்கழகத்தின் காந்தி பவனில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதுவரை எந்தவொரு தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்று சண்டிகர் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத இந்த மின்னஞ்சல் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 1 அன்று டெல்லி மேயர் ராஜா இக்பால் சிங் அலுவலகத்திற்கு வந்த இதேபோன்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.














