தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்….
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட த.வெ.க. தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளார்….














