• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

Hanushya P by Hanushya P
2026/04/08
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

424 மில்லியன் ரூபாய் செலவில்,  ‘கிளீன் ஸ்ரீலங்கா’ கருப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், இலங்கை விமானப் படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்புடனும் 24 மணிநேரமும் முன்னெடுக்கப்பட்ட பாரிய நடவடிக்கையின் விளைவாக, இந்தத் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே நிறைவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

blank

தினமும் சுமார் 75,000 பயணிகள் மற்றும் சுமார் 2,000 பஸ்கள் பயன்படுத்தும் வகையில் பல நவீன வசதிகளுடன் இந்த பேருந்து முனையம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதன் தரைத்தளம் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது மாடியில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்காக குளிரூட்டப்பட்ட தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது மாடியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகம் மற்றும் நவீன கேட்போர் கூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முதலாவது மாடியில் விற்பனை நிலையங்கள் மற்றும் நவீன சுகாதார வசதிகளும், இரண்டாவது மாடியில் பாடசாலை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிட வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முழு வளாகமும் CCTV கெமரா கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதோடு, டிஜிட்டல் திரைகள் மற்றும் நவீன தகவல் மையத்தின் ஊடாக பயணிகளுக்குத் தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கில் செலவிடப்படும் பல திட்டங்களுக்கு மத்தியில், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தைப் போன்று பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிய வேறு எந்தத் திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பணத்தில் நவீனமயமாக்கப்பட்ட இந்த முனையத்தை அதே தரத்துடன் பராமரிப்பதே அடுத்த சவாலாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வருட காலத்திற்கு இதனைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க பாதுகாப்புச் செயலாளர் உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

blank

நாடு எதிர்நோக்கிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு வழங்கிய அர்ப்பணிப்புக்காக இலங்கை விமானப் படைக்கு அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அதேபோல், இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அரசியல் அதிகாரத்தினால் பெரும் அழிவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்றும், அதனைப் பாதுகாப்பதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நேர்மையான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நவீன வசதிகளுடன் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக மத்திய பேருந்து நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது ஒரு அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தபோதிலும். அதிகார பலம் மற்றும் அடாவடித்தனத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட குழுக்களினால் வெவ்வேறு பகுதிகள் பிரித்துக்கொள்ளப்பட்டிருந்ததால் அழிவடைந்து கொண்டிருந்தது. ஆனால், 200 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றத்தின் மூலம் மக்களுக்கு மிகவும் உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது வெறும் வர்ணம் பூசப்பட்ட மாற்றம் மட்டுமல்ல என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் போது அதற்குத் தேவையான வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர். இவ்வாறான கட்டமைப்புக்கள் மற்றும் முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போது மக்களின் சிந்தனைப் போக்கும் மாறும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

blank

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,  நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.ஜி. ஹேமச்சந்திர மற்றும் அரச அதிகாரிகள், கிளீன் ஸ்ரீலங்கா செயலகப் பிரதிநிதிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Clean Sri Lankacost of Rs. 424 millionfully modernizedPurakottai Central Bus Stand
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

Next Post

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

Related Posts

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!
இலங்கை

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!
கிரிக்கெட்

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

2026-08-25
அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!
இலங்கை

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

2026-08-25
Next Post
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.