புத்தாண்டு காலத்தில் மட்டும் வாகன விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 80க்கும் மேல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணங்கள் ஏப்ரல் 10 முதல் 18 ஆம் திகதிக்குள் பதிவாகியுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் வீதி விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளில் அதிகபட்ச வீதி விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதேநேரம், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட விபத்துக்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.













