பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன.
அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
பறிமுதல்கள் தொடர்பான வழக்குகள் அந்தந்த நீதிமன்றங்களில் முழுமையாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், பாலபிட்டிய நீதிபதி பவித்ரா சஞ்சீவனி பத்திரானா மற்றும் ஹலவத்த நீதிபதி ஹர்ஷா டி. சில்வா ஆகியோரின் முன்னிலையில் இந்த அழிப்பு நடைபெற்றது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 302 கிலோ போதைப்பொருட்கள், புத்தளம் மாவட்டம் வனத்தவில்லுவ பகுயில் எரிவாயு உலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.













