இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்த சம்பவம் தொடர்பாக கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.















