அமெரிக்காவிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் Charles, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் அரச குடும்ப உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஆற்றிய இந்த உரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘சிறப்பு உறவை’ மன்னர் வெகுவாகப் பாராட்டினார்.
உக்ரைனின் பாதுகாப்பு, நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 430 பில்லியன் டொலர் வர்த்தகம் மற்றும் 1.7 டிரில்லியன் டொலர் பரஸ்பர முதலீடு ஆகியவை மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி டிரம்ப் சில வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மன்னரின் இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவருக்கு கௌரவ இராணுவ அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
















