சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) இது குறித்துத் தெரிவிக்கையில், ‘டைபூன்’ (Typhoon) போர் விமானங்கள், ஆளில்லா ட்ரோன் படகுகள் மற்றும் ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon) என்ற நாசகாரி போர்க்கப்பல் ஆகியவை இந்த கூட்டுப் பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்காக 115 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதலால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 நாடுகள் ஒன்றிணைந்து இந்த தற்காப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
உலக எரிபொருள் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இப்பாதையை மீண்டும் திறப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு உள்நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவும் சூழலில், சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.














