ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி, கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ‘பி’ பிரிவு டி:20 கிரிக்கெட் போட்டி மற்றும் கவர்னர் கிண்ணப் போட்டி ஆகியவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மழை நிலைமை தணிந்த பின்னர், திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக இன்று நடைபெறவிருந்த தடகளத் தேர்வுப் போட்டியும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.













