• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

வனவாஸல ரயில் விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்பதும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரால் தண்டவாள பாகங்கள் திருடப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வனவாஸல பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட பயங்கர விபத்திற்கு, தண்டவாளத்தின் பாகங்கள் திருடப்பட்டதே காரணம் என மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் வெறும் 3,000 ரூபாய் பணத்திற்காகவே இரும்புக்கடையில் விற்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வனவாஸல ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த திடுக்கிடும் விபரங்களை வௌியிட்டார்.

ரயில் தண்டவாளத்தின் ஆணைகள் (Fittings and Bolts) மற்றும் பாகங்களைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு (Drug Addict) அடிமையானவர் என்றும், போதைப்பொருள் வாங்குவதற்காகவே இந்தத் திருட்டில் ஈடுபட்டார் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் இளைஞரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம், திருடப்பட்ட தண்டவாளப் பாகங்கள் எங்கு விற்கப்பட்டன என்ற விபரம் வௌியானது.

அதன் அடிப்படையில், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த பழைய இரும்புக்கடை அடையாளம் காணப்பட்டு, அதன் உரிமையாளரும் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க:

“தண்டவாளப் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்த நபருக்கு வெறும் 3,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த பணமே கிடைத்துள்ளது. ஆனால், அவரது இந்தச் செயலால் ரயில்வே திணைக்களத்திற்கும் நாட்டிற்கும் மில்லியன் கணக்கிலான ரூபாய் நட்டமும், பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவருக்குப் பாரிய தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, திருடப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தெரிந்தே கொள்வனவு செய்தமைக்காக, அந்தப் பொருட்களை வாங்கிய கடை உரிமையாளருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரப்படும்.”

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, இந்த விபத்தினால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் நட்டங்களைச் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே ஈடு செய்வதற்கான சிவில் வழக்குகளும் தொடரப்படவுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாண வட பிராந்திய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

Next Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

Related Posts

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

மக்கள் வங்கியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு குறித்து விளக்கம்!

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பயணிகள் காயம்!
இலங்கை

வனவாஸல ரயில் விபத்து: மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்; இழப்பீடு வழங்க நடவடிக்கை!

2026-05-17
Next Post
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

0
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

0
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17

Recent News

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.