• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.

சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகளில் தலையிடுமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். 

இதற்கு அமைய வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்ற பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக இருந்தாலே இந்தக் கொடுப்பனவு ஏற்புடையது என்றும், இதனை நடைமுறைப்படுத்த முதற்கட்டமாக ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதன் பின்னர் மாவட்ட செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்தப் பணி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபில்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலையீட்டுடன் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதியை விரைவில் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இதன் பின்னரான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு சகல நிறுவனங்களும் உடனடியாக ஒன்றிணைந்த முறையில் செயற்பட வேண்டிதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. 

இதற்கு அமைய, பிரதேச செயகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது ஏனைய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது அவசர நடவடிக்கை குறித்து  விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். 

அத்துடன், வட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிவிக்க முடியும் என்றும், கூடிய விரைவில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல், சகல முன்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்புடனான  ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க சேவையில் உள்ள பெண்களின் இடமாற்றங்ளின் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோல, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் குழு குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related

Tags: கொடுப்பனவுசரோஜா சாவித்திரி போல்ராஜ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

Next Post

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

Related Posts

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

2026-05-20
பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

2026-05-20
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!
இலங்கை

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
Next Post
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

0
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

0
பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

0
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

2026-05-20
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

2026-05-20
பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

2026-05-20
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20

Recent News

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

2026-05-20
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

2026-05-20
பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

2026-05-20
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.