பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் காலமானதாகத் தவறுதலாக அறிவிப்பு வெளியிட்ட பிரசித்தி பெற்ற ‘ரேடியோ கரோலின்’ (Radio Caroline) வானொலி நிலையம், இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்ட மனவருத்தங்களுக்குத் தனது அதிகாரப்பூர்வ மன்னிப்பைக் கோரியுள்ளது.
எசெக்ஸ் (Essex) பகுதியை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த வானொலி நிலையத்தில், நேற்றுமுன்தினம் (மே 19) மதியம் ஏற்பட்ட ஒரு “கணினி பிழை” (Computer error) காரணமாகவே இந்தத் தவறான அறிவிப்பு ஒலிபரப்பானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவறான அறிவிப்பைத் தொடர்ந்து, விதிகளின்படி ரேடியோ கரோலின் வானொலிச் சேவை முற்றிலும் அமைதியானது. இதனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட தொழில்நுட்பக் குழுவினர், வழக்கமான ஒலிபரப்பை மீளமைத்ததுடன் வானொலி வாயிலாகவும் உடனடியாக மன்னிப்புக் கோரினர்.
இந்தத் தவறு நடந்ததைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் 1:58 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலான அந்த வானொலியின் முந்தைய நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்கும் வசதி (Playback) அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நேற்று மதியம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















