சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளில் (Strategic ties) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
சீனப் பெருமன்றத்தில் (Great Hall of the People) ஜனாதிபதி புதினுக்கு ராணுவ அணிவகுப்பு மற்றும் பீரங்கி முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேவேளை,இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெய்ஜிங் வருகையைத் தொடர்ந்து, இந்தச் சீனா-ரஷ்ய தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால், இதன் பின்னணியும் முடிவுகளும் சர்வதேச அரங்கில் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.














