மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பை பேணிய முன்னாள் இளவரசர் மவுண்ட்பேட்டன் – வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வின்ட்சரில் உள்ள அவரது இல்லத்திற்கு பாலியல் நோக்கங்களுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த விசாரணையில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனையவர்களும் முன்வர வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல மாதங்கள் நீடிக்கக்கூடிய இந்த விரிவான விசாரணையில், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
முன்னாள் அரச வர்த்தகத் தூதுவராக இருந்த அவர், Jeffrey Epstein தொடர்பான FBI ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுப் பதவியில் முறைகேடாக நடந்துகொண்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் பாலியல் குற்றங்கள், மோசடி, ஊழல் மற்றும் நீதித்துறையைத் திசைதிருப்பும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டு வருவதாக விசாரணை அணியுடன் தொடர்புடைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.















