ஐபில் கிரிக்கெட் போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன
லீக் போட்டியின் கடைசி இரண்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் வெற்றிப்பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி என்ற நிலையில் மும்பை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டினை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
206 ஓட்டங்களை வெற்றியிலக்கான கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதனால் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தியது.
இந்நிலையில் பிளேஓப் சுற்றின் முதல் போட்டியில் நாளைய தினம் ரோயல் செலன்ஜர்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதில் வெற்றிப்பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.
தோல்வி அடையும் அணி அதற்கு அடுத்த நாள் நடைபெறும் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிப்பெறும் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தும்
அதில் வெற்றிப்பெறுகின்ற அணி இறுதிப்போட்டியில் முதல் பிளேஓப் போட்டியில் வெற்றி;ப்பெற்ற அணியை வருகின்ற 31ம் திகதி அஹ்மதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சந்திக்கும் என்பது குறிப்பிடதக்கது.















