இன்று (28) காலை சுமார் 9.00 மணியளவில் களுத்துறை, மசூதி சாலையில் உள்ள வெட்டுமக்கடை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, நகோடா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.













