கொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (29) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு – 15 ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தமது விட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் இடம்பெற்ற வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் குறித்த நபர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.













