தமிழில் கவனிக்கப்பட்ட ‘ஃபேமிலி படம்’ படத்தை இயக்கிய செல்வ குமார் திருமாறன், அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘டெக்சாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார்.
சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணிதாசன், சம்யுக்தா ஷான் நடித்துள்ளனர். யுகே ஸ்குவாட் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வ குமார் திருமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது பற்றி இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறும்போது ‘கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். பொழுது போக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள், விறுவிறுப்பான கதையம்சத்துடன் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் முழுமையான திரையரங்கு அனுபவத்தைக் கொடுக்கும். இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும்’ என்றார்.


















