தலவத்துகொட சந்தி அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை (09) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும், இந்த சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














