ஜோகன்னஸ்பர்க்கின் ஒரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (09) இரவு கிளீவ்லாந்தில் உள்ள ஒரு முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும், சந்தேக நபர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கிளீவ்லேண்டில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே, வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் வந்த 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் முறைசாரா குடியிருப்புப் பகுதிக்குள் இரு நுழைவாயில்கள் வழியாகவும் நுழைந்து, அப்பகுதி முழுவதும் பயணித்து, பல இடங்களில் குடியிருப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நட ந்த சம்பவ இடத்திலேயே எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த குறைந்தது ஒன்பது பேர் பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா உலகில் மிக அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 60 பேர் கொல்லப்படுகிறார்கள்.
அந்நாட்டில் முறைசாரா குடியிருப்புகளில் துப்பாக்கிச் சூடுகள் மிகவும் சாதாரணமாக நிகழ்கின்றன,
மேலும் அவை சில சமயங்களில் கும்பல் வன்முறை மற்றும் தனிப்பட்ட தகராறுகளுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.













