இலங்கைக்கு எதிரான முதலாவது டி:20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
ஜமைக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை சார்பில் கமிந்து மெண்டீஸ் மாத்திரம் அதிகபடியாக 39 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினர்.
148 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேந்தியத்தீவுகள் அணியானது 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
மேந்தியத்தீவுகள் சார்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப் 54 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜேசன் ஹோல்டர் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி:20 போட்டியானது இதே மைதானத்தில் ஜூன் 14 (ஞாயிறு) அன்று ஆரம்பமாகும்.














