புலத்சிங்கள பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது 55 வயதான மனைவியும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.














