தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை15ஆவது முறையாக சிறப்பாக நேற்றையதினம் (30) அரங்கேறியது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய ஆவணக் காப்பக (Rocord Room) கட்டட திறப்பு விழாவுக்கான வரவேற்பு நிகழ்வு வவுனியா வடக்குப் பிரதேசத்தின் மன்னகுளம் கிராமத்தில் புதிய கட்டடம் திறப்புவிழா கண்டிருக்கிறது அவ் நிகழ்விலே குடமூதற்கும்மி ஆற்றுகை இடம்பெற்றிருந்தது.
பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உள்ளூர் கலாசார மரபுகளைப் பேணிப் பாதுகாக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்ததுடன், நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது.
இத்தகைய கலாசார நிகழ்வுகள் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை நிலைநிறுத்துவதோடு, நாட்டுப்புறக் கலைகளின் தொடர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.













