பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான லோர்ட் ராய் ஹேட்டர்ஸ்லி (Roy Hattersley), தனது 93ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், ஹேட்டர்ஸ்லியை “தொழற்கட்சி இயக்கத்தின் ஒரு மாபெரும் ஆளுமை” எனப் பாராட்டியுள்ளார்.
1964ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
அத்துடன், 1970களில் ஜேம்ஸ் கலகனின் (James Callaghan) ) அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், பின்னர் நீல் கின்னொக்கின் (Neil Kinnock) தலைமையின் கீழ் ஒன்பது ஆண்டுகள் கட்சியின் துணைத் தலைவராகவும் செயற்பட்டார்.
அரசியல் கடமைகளுக்கு அப்பால் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த ராய் ஹேட்டர்ஸ்லியின் மறைவு, பிரித்தானிய அரசியலுக்கும் தொழற்கட்சிக்கும் பேரிழப்பாகும் எனப் பல அரசியல் தலைவர்களும் தங்களது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
















