கேரளாவில், ‘ஷிகெல்லா பாக்டீரியா’ தொற்று நேற்று மேலும் 10 பேருக்கு உறுதியானமையினால் , இந்த மாதத்தில் மட்டும் மொத்த தொற்று பாதிப்பு, 120 ஆக உயர்ந்துள்ளது.
ஷிகெல்லா எனும் பாக்டீரியா தொற்று மாசுபட்ட உணவு, தண்ணீர், சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் வழியாக பரவுகிறது.
கேரளாவில் இந்த தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டம், எரஞ்சிக்கல் பகுதியில் கண்டறியப்பட்டது.
தொற்று பாதிப்புக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்தார்.
அதன் பின் வயநாடு, மலப்புரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தொற்று பரவியது.
தற்போது வரை ஷிகெல்லா தொற்றினால் கேரளாவில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் இந்த மாத பாதிப்பு மட்டும் 120ஐ கடந்துள்ளது.
















