அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ (Dr. Chandika Epittakaduwa) உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அச்சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (27) நடைபெற்ற போதே, அவர் இந்த பதவிகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக வைத்தியர் பண்டார வரகாகொட (Dr. Bandara Warakagoda) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு மேலதிகமாக, 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் எவ்விதப் போட்டியுமின்றி ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுகாதாரத் துறையில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளும், அரச வைத்தியர்களின் வெளிநாட்டுப் இடப்பெயர்வுகளும் அதிகரித்து வரும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த புதிய தலைமைத்துவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அரச வைத்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களுக்கான சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் புதிய நிர்வாகக் குழு அரசாங்கத்துடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












