• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – ஜனாதிபதி

“போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – ஜனாதிபதி

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, கொழும்பு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70% போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன் கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன்இ பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்துஇ பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புக்களை விரைவாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், வழக்குகளுக்கு தொடர்பான பொருட்கள் முகாமைத்துவத்திற்கான தன்னியக்க கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது மற்றும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்கு சட்டத்துறை மற்றும் விஞ்ஞானத் துறையின் நிபுணத்துவ ஆதரவைப் பெற்று   ஆய்வுகூட வசதிகளை பரவலாக்கம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மற்றும் அவை வழக்குப் பொருட்களாக வைத்திருக்கப்படும் இடங்கள் தொடர்பான முறையான அறிக்கை ஒன்றின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறவுள்ள கையிருப்புக்கள்இ பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுள்ள கையிருப்புக்கள் மற்றும் வழக்குப் பொருட்களாகக் காணப்படும் கையிருப்புக்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை பேணுவதில் உள்ள முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அது விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய போதைப்பொருள் பரிசோதனைத் தொகுதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தல், பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளைத் வினைத்திறன் மிக்கதாகச் செய்தல் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றுதல்இ மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கடல் மார்க்கமாக போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்காக கடற்படை, காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஒருங்கிணைந்த விசேட செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதுடன் குறிப்பாக படகுகள் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கும் செயன்முறையை நிறுத்துவது மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட வாகனங்களை அரசுடமையாக்கும் சட்டரீதியான அதிகாரங்களை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மல்வத்து பிரிவின் அநுநாயக்க அதி வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிரி தேரர், அஸ்கிரி பிரிவின் அநுநாயக்க அதி வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், ராமஞ்ஞ மகா நிகாயாவின் அநுநாயக்க அதி வணக்கத்துக்குரிய வலேபொட குணசிரி தேரர், அதி வணக்கத்துக்குரிய குப்பியாவத்தே போதானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கரத்தினரும், அருட் தந்தை ஜூட் பெர்ணான்டோ, அருட்தந்தை நிசாந்த பெர்னாண்டோ, ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், அஷ்ஷெய்க் மொஹமட் அர்கம் நூரமித் மௌலவி ஆகிய மத தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,  ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயியகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயேஷா ஜினசேன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும்,  பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: drug menacegovernment institutionsnational plan.President Anura Kumara Dissanayake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2028 முதல் பிளேஸ்டேஷன் கேம்களில் ‘டிஸ்க்’ (CD/DVD) பயன்பாடு படிப்படியாக நிறுத்தம்? சோனி நிறுவனம் அதிரடித் திட்டம்!

Next Post

எம்.பி. அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு!

Related Posts

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!
BREAKING

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

2026-07-17
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

2026-07-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-17
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
Next Post
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

எம்.பி. அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

உலகின் சிறந்த சுற்றுலா தீவு நாடாக இலங்கை முதலிடம்!

உலகின் சிறந்த சுற்றுலா தீவு நாடாக இலங்கை முதலிடம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

0
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

0
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.