பர்மிங்காமில் (Birmingham) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு பதின்ம வயது இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்மிங்காமில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய சிறுவன் ஒருவன் மீது, கொலை முயற்சி மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கி வைத்திருந்ததாக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் தற்சமயம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று வரை பர்மிங்காம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் சிசிடிவி அல்லது பிற கமரா பதிவு காட்சிகளை வைத்திருப்பர்வகள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் பர்மிங்காம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
















