• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” -சலேவை சாடிய சிறிநேசன்!

“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” -சலேவை சாடிய சிறிநேசன்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. குற்றம் செய்யாதவர்கள் வெளிப்படையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெளியில் வரலாம்.

தம்மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும், ஜனாதிபதி மீதான விமர்சனங்கள் என்றும் கூறுவது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை.

இது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்காகவும், சிறைக்குச் சென்றாலும் தனது சீற்றம் குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காகவுமே செய்யப்படுகிறது.

தற்போது விசாரணைகளை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர, கடந்த காலத்திலும் நேர்மையாகச் செயல்பட்ட ஓர் அதிகாரி ஆவார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மூலம் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், சுமார் 43 ஊடகவியலாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத், கல்வியலாளர் தம்பையா மற்றும் அருட்தந்தையர்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு விசாரணை கடந்த காலத்திலும் நடைபெற்றது.

பிள்ளையான் அவர்களுடன் இருந்த சகாக்களே தற்போது அவருக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பரவலாகப் பேசப்படுகின்றன.

இதேவேளை, சுரேஷ் சலே என்பவர் தனது கணினி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை வழங்காமல், வாக்குமூலம் அளிக்க மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நிரபராதி எனில், சட்டத்திற்குப் பயப்படாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் மூலமே எது உண்மை, எது பொய் என்பது வெளிவரும்.

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சி குறித்துப் பேசிய அவர், ஐந்து ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் 30 வருடங்களாக மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

சோமரத்ன ராஜபக்ச என்பவர் கூறியதன் அடிப்படையில் தற்போது செம்மணியில் 400-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உண்மைகள் வெளிவருவது வரவேற்கத்தக்கது என்றாலும், எலும்புக்கூடுகளின் மரபணு சோதனை மூலம் கொல்லப்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும், கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய கொடூரங்கள் மீள நிகழாமல் இருக்க முறையான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில், ‘பப்பா’ மற்றும் ‘சொனிக்’ என அழைக்கப்படும் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அல்பா’ எனப்படும் முக்கிய குற்றவாளிக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், அவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசு விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டினாலும், பௌத்த சிங்கள மேலாதிக்கக் குருமார்களின் அழுத்தங்கள் காரணமாக உண்மைகள் முழுமையாக வெளிவருமா என்ற சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.

Related

Tags: sirinesansrilanka newssuresh salle
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

Next Post

நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Related Posts

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!
இலங்கை

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

2026-10-06
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இந்தியா

அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

2026-10-06
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

2026-10-06
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!
இலங்கை

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!

2026-10-06
பீஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் மொரிஷியஸை வீழ்த்திய இலங்கை அணி!
உதைப்பந்தாட்டம்

பீஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் மொரிஷியஸை வீழ்த்திய இலங்கை அணி!

2026-10-06
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!

2026-10-06
Next Post
நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.

கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

0
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

0
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

0
மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

0
இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2026-10-06
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

2026-10-06
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

2026-10-06
மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

2026-10-06
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: