முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவரும், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு ஊதியங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருமான சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்தது.
இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு குறிப்பிட்ட உண்மைகள் எதுவும் இல்லை என்பதால், பிணை மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேக நபரை 22ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.












