‘அஸ்வெசும’ (Aswesuma) பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிப்பது தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளில் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஒக்டோபர் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று அதன் தலைவர் நிமல் கோட்டவெலகெதர குறிப்பிட்டுள்ளார்.













