ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனையை நிறைவுசெய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவை விசாரிக்க அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து செப்டம்பர் 22ஆம் திகதி அன்று உத்தரவு பிறப்பிக்கும் என அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருப்பின், அவை இமாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.
















