இலங்கையில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவான மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர் (47,136 பேர்) மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 18,922 நோயாளர்களும் (21.25%), கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) பதிவாகியுள்ளனர். இதில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் 3,686 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைச் சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக அறிவித்து, விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












