இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரியின் படைப்பாற்றலைப் பாராட்டியுள்ள நடிகர் கார்த்தி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் அன்பும் புன்னகையும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் சிறப்பான நடிப்பைப் புகழ்ந்துள்ள கார்த்தி, அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ மற்றும் மூத்த நடிகை ராதிகா ஆகியோரின் நடிப்புத் திறனையும் பாராட்டியுள்ளார்.








