கொழும்பு, மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் 12 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே நேற்று (19) இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட அந்தச் சந்தேகநபர், விசாரணை நடைபெறும் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் மட்டக்குளியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் சோதனை நடத்தி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த ரிவால்வர் மற்றும் 12 தோட்டாக்களைக் கைப்பற்றினர்.
இச்சம்பவம் குறித்துக் கொழும்பு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













