• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/20
in இலங்கை, கிளிநொச்சி, முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறி இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

பளைப் பகுதியில் வன நிலத்தை அழித்து மூன்று மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகவும் குண்டு தயாரிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது.

காணொளியில் காட்டப்பட்டுள்ள இடம், கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றால் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

விசாரணை முடிவுகளின்படி, அந்த இடத்தில் வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் அல்லது குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடந்ததற்கோ, அல்லது அந்த இடம் பயங்கரவாதச் செயல்களுக்கான போர்முறைப் பயிற்சி மையமாகச் செயல்பட்டதற்கோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாகக் காடுகளை அழித்தது மற்றும் சட்டவிரோதமாகச் சொத்துகளைக் கையகப்படுத்தியது தொடர்பான தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன. 

இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்பியதாகக் கூறப்படும் நபர் ஒருவர், ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

வீடியோ மற்றும் ஊடகச் சந்திப்பு மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும், பொரலெஸ்கமுவ – பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இவர் நேற்று (19) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

Related

Tags: LTTEPallaiகிளிநொச்சிதமிழீழ விடுதலைப் புலிகள்பொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காருடன் மோதிய முச்சக்கர வண்டி: சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

Next Post

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

Related Posts

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

2026-10-04
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!
உலகம்

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

2026-10-04
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!
இலங்கை

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.
இலங்கை

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

2026-10-04
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
இலங்கை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

2026-10-04
Next Post
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

0
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

2026-10-04
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

2026-10-04
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: