நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 7,777 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,825 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18,475 நோயாளிகளும், கண்டியில் 6,726 நோயாளிகளும், மாத்தறையில் 6,066 நோயாளிகளும், களுத்துறையிலிருந்து 6,013 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.













