கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கி மேலாளர்களையும் ஒரு தொழிலதிபரையும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நான்கு தனியார் வர்த்தக வங்கி மேலாளர்களும் ஒரு தொழிலதிபரும் கடந்த (17) அன்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.














